தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இன்று அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, தமாக தவிர்த்து அதிமுக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்று இருக்கின்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் சூழல் உள்ளது. நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள மாநிலங்களுக்கு இது தண்டனையாக அமையும். அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் குரல் நெறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் நலனிற்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை சரியாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாமற்றது. அந்த வகையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் 1971 ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையிலேயே தொகுதிகள் தொடரவேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படும். கருத்து வேறுபாடு இன்றி அனைவரும் கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை முன்மொழிந்திருகிறார்கள்.

‘முதல்வர் மற்ற மாநிலங்களுக்கு சென்று கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து ‘தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய குழுவை விசிக வரவேற்கிறது’ என்று திருமாவளவன் கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
