Champions Trophy 2nd Semi Final: நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா.. வெல்லப்போவது யார்? போட்டி எங்கே, எப்போது?

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. லீக் போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன. நேற்று (மார்ச் 04) முதல் அரை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 48.1 ஓவர்களில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. 

இரண்டாவது அரை இறுதி போட்டி 

இந்த நிலையில், மார்ச் 09 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் இந்திய அணியுடன் எந்த அணி மோதப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 05) நடைபெறும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் இதற்கான விடை கிடைத்துவிடும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதற்காக போட்டி போடுகின்றன. 

மேலும் படிங்க: IND vs AUS | பேட்டிங் செய்யாமலேயே வரலாறு படைத்த விராட்! ராகுல் டிராவிட்டின் சாதனை முறியடித்தார்

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் மிட்செல் சண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

எங்கே, எப்போது? 

முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா விளையாடியதால் அப்போது துபாயில் நடைபெற்றது. ஆனால் இரண்டாவது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுவதால், இப்போட்டி பாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில்  இன்று பிற்பகல் 2.10 மணிக்கு டாஸ் விசப்பட்டு பின்னர் 2.30 மணிக்கு போட்டியானது தொடங்கப்படும். இப்போட்டியை ஸ்போட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம். 

பிட்ச் ரிப்போர்ட்

லாகூர் கடாபி மைதானமானது பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என இருவருக்குமே சாதகமாக காணப்படுகிறது. போட்டியில் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கல் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. மழையின் இடையூறு இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கோப்பையை வென்று கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேல் அவதால், இப்போட்டியில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா அணி 1998ஆம் ஆண்டும், நியூசிலாந்து அணி 2000ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் பிளேயிங் 11

தென்னாப்பிரிக்கா: ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, வியான் முல்டர், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி. 

நியூசிலாந்து: வில் யங், டெவன் கான்வே, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மேட் ஹென்றி, வில் ஓ’ரூர்க். 

மேலும் படிங்க: உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.