மதுரை: அரசியல் கட்சியினர் தங்களது கட்சி கொடிக் கம்பங்களை தங்கள் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என கூறிய உயர்நீதிமன்றம் அமர்வு, அரசியல் கட்சிகளின் சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் அரசியல் கட்சிகளின் அறிவிப்பு பலகைகள், கொடி கம்பங்கள், சிலைகள் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் […]
