உ.பி.யில் ஹோலி பண்டிகையில் முஸ்லிம்களுக்கு தடை: பாஜக, இந்து அமைப்புகள் வலியுறுத்தல்

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பிருந்​தாவனில் பிரஜ் ஹோலி கொண்​டாட்​டங்​கள் மிக​வும் பிரபலமானவை. இங்கு கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் இருப்​பதே அதற்கு காரணம். இங்கு மார்ச் 13-ம் தேதி ஹோலி பண்​டிகை தொடங்கி ஒரு வாரம் நடை​பெறுகிறது. இந்​நிகழ்ச்​சிகளில் உள்​ளூர் முஸ்​லிம்​களும் பங்​கேற்​பது வழக்​கம். இதற்கு தடை விதிக்க உ.பி.பாஜக எம்​எல்​ஏ.​வும், இந்​துத்​துவா அமைப்​பினரும் வலி​யுறுத்தி உள்​ளனர்.

இதுகுறித்து மதுரா பாஜக எம்​எல்ஏ ராஜேஷ் சவுத்ரி கூறும்​போது, “இந்து பண்​டிகை​களில் முஸ்​லிம்​கள் பங்​கேற்​பது சமூக முரண்​பாடு​களுக்கு வழி​வகுக்​கிறது. எங்​கள் விழா​வில் முஸ்​லிம்​கள் பங்​கேற்​ப​தன் மூலம், அவர்​கள் ‘காதல் ஜிஹாத்’ மற்​றும் துன்​புறுத்​தல் போன்ற சம்​பவங்​களில் ஈடு​படு​கின்​றனர். இதன் மூலம், முஸ்​லிம்​கள் இந்து பண்​டிகைகளை சீர்​குலைக்க முயற்​சிக்​கின்​றனர்” என்​றார்.

அகில இந்​திய சந்த் சமிதி இந்​துத்​துவா அமைப்​பின் தேசிய பொதுச் செய​லா​ளர் சுவாமி ஜிதேந்​தி​ரானந்த் சரஸ்​வதி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “கும்​பமேளா​வில் இருந்து ரொட்​டி, ஹோலி​யில் இருந்து வேடிக்​கையை இவர்​கள் விரும்​பு​கின்​றனர். எனவே, பிருந்​தாவன் ஹோலி பண்​டிகை​களில் இந்​துக்​கள் அல்​லாதோர் நுழைவதை முழு​மை​யாக யோகி அரசு தடை செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

“உ.பி.​யின் அனைத்து இந்து புனிதத் தலங்​களி​லும் முஸ்​லிம்​கள் பங்​கேற்க தடை விதிக்க வேண்​டும்” என்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்​பான சட்ட போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள வழக்​கறிஞர் தினேஷ் லஹரி வலி​யுறுத்தி உள்​ளார். தவிர கோயில்​களுக்கு அரு​கில் முஸ்​லிம்​கள் கடை வைப்​பதை தடை செய்ய கோரி​யும் முதல்​வர் ஆதித்​ய​நாத்​துக்கு தன் ரத்​தத்​தில் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

இதற்​கிடை​யில், தற்​போது தொடங்​கி​யுள்ள ரமலான் மாதத்​தில், மசூ​தி​களின் ஒலிபெருக்​கி​களை அகற்​றும் பணி​யும் நடக்​கிறது. இதுகுறித்து உ.பி. முன்​னாள் முதல்​வரும் பகுஜன் சமாஜ் தலை​வரு​மான மாயா​வதி கூறுகை​யில், “இந்​தியா அனைத்து மதங்​களை​யும் மதிக்​கும் ஒரு மதச்​சார்​பற்ற நாடு. மத்​திய, மாநில அரசுகள் அனைத்து மதங்​களைப் பின்​பற்​று​பவர்​களை​யும் பாரபட்​சம் இல்​லாமல் சமமாக நடத்த வேண்​டும்” என்று கூறி​யுள்​ளார். முஸ்​லிம் மதத் தலை​வர் சவுத்ரி இப்​ராகிம் உசைன் கூறும்​போது, “ஹோலி​யில் முஸ்​லிம்​கள் பங்​கேற்பு ஏற்​கெனவே மிகக்​ குறைவு. ஏனெனில்​, ஹோலி​யில்​ பயன்​படுத்​தும்​ வண்​ணங்​கள்​ இஸ்​லாமிய நம்​பிக்​கைகளுக்​கு எதி​ரானது” என்​று தெரி​வித்​​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.