தங்கம் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் வீட்டில் அதிகாரிகள் சோதனை: ரூ.4.73 கோடி மதிப்பு ரொக்கம், தங்கம் சிக்கியது

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்​கக் கடத்​தல் வழக்​கில் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் நேற்று பெங்​களூரு​வில் உள்ள அவரது வீட்​டில் சோதனை நடத்​தினர். அதில் ரூ.2.67 கோடி ரொக்​கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்​க​மும் சிக்​கி​யுள்​ளது.

கர்​நாடக மாநிலம் சிக்​கமகளூருவை சேர்ந்​தவர் நடிகை ரன்யா ராவ்​(32). கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமச்​சந்​திர ராவின் வளர்ப்பு மகளான இவர் கன்​னடம், தமிழ், தெலுங்கு உள்​ளிட்ட மொழி திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். தமிழில் நடிகர் விக்​ரம் பிரபு நடித்த ‘வா​கா’ திரைப்​படத்​தில் அவருக்கு ஜோடி​யாக ந‌டித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், கடந்த திங்​கள்​கிழமை நள்​ளிரவு நடிகை ரன்யா ராவ் துபா​யில் இருந்து பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்​தார். அவர் 14.8 கிலோ தங்க நகையை மறைத்து எடுத்து வந்​த​தால் வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அவரிடம் விசா​ரித்த போது, தனது தந்தை ராமச்​சந்​திர ராவ் கர்​நாடக போலீஸ் டிஜிபி என கூறி​னார். இருப்​பினும் அதி​காரி​கள் அவரை விசா​ரித்த போது தங்​கம் கடத்​தி​யது தெரிய​வந்​தது.

இதையடுத்து அதி​காரி​கள் அவரை பவுரிங் மருத்​து​வ​மனைக்கு அழைத்து சென்​று, மருத்​துவ பரிசோதனை மேற்​கொண்​டனர். பின்​னர் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் அவரை ஆஜர்​படுத்​தி, மார்ச் 18-ம் தேதிவரை காவலில் எடுத்​துள்​ளனர். இதைத் தொடர்ந்து அதி​காரி​கள் ரன்யா ராவிடம் நேற்று 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

காப்​பாற்​றிய அதி​காரி யார்? – அப்​போது, நடிகை ரன்யா ராவ் வணிக நோக்​கத்​துக்​காக துபா​யில் இருந்து தங்​கம் கடத்தி வந்​தேன் என்று கூறிய​தாக தெரி​கிறது. 10-க்​கும் மேற்​பட்ட முறை துபாய் சென்று வந்த அவர், வரும்​போதெல்​லாம் பெல்ட், பை, உடைகளில் தங்​கம் கடத்தி வந்​த​தாக கூறி​யுள்​ளார். கடந்த 15 நாட்​களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்​துள்​ளதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்து அதி​காரி​கள் ரன்யா ராவ் ஒவ்​வொரு முறை​யும் துபாய் சென்று வந்​த​போது எப்​படி சோதனை​யில் இருந்து தப்​பி​னார்? அவர் அப்​போதெல்​லாம் என்ன மாதிரி​யான உடைகளை அணிந்​திருந்​தார்? அவரை சோதனை செய்ய விடா​மல் ஒவ்​வொரு முறை​யும் விமான நிலை​யத்​தில் அழைத்து சென்ற காவல்​துறை உயர் அதி​காரி யார்? எவ்​வித சோதனை​யும் இல்​லாமல் விஐபிகள் செல்​லும் பாதை​யில் இவரை அழைத்து சென்​றது எப்​படி என விசா​ரணையை முடுக்​கி​விட்​டுள்​ளனர்.

கட்​டுக்​கட்​டாக பணம்: இதனிடையே வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் நேற்று பிற்​பகலில் பெங்​களூரு​வில் உள்ள‌ நடிகை ரன்யா ராவின் வீட்​டில் சோதனை நடத்​தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த சோதனை​யில், அவரது வீட்​டில் இருந்து ரூ.2.67 கோடி ரொக்​கப்​பணத்தை கைப்​பற்​றினர். இந்த பணம் கட்​டுக்​கட்​டாக க‌ட்​டில் மெத்​தைக்கு அடி​யில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​த​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அதே​போல ரகசிய லாக்​கரில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளை​யும் பறி​முதல் செய்​தனர். மேலும் ரூ.17 கோடி மதிப்​பிலான சொத்​துக்​களின் ஆவணங்​களை​யும் அதி​காரி​கள் கைப்​பற்​றிய​தாக தெரி​வித்​துள்​ளனர்.

தொடர்பு இல்லை: இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை டிஜிபி ராமசந்​திர ராவ், ‘‘எனக்​கும் நடிகை ரன்​யா​ரா​வுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்​லை. எங்​களுக்​குள் எவ்​வித பேச்​சு​வார்த்​தை​யும் இல்​லை. 4 மாதங்​களுக்கு முன்பு ரன்யா ராவுக்கு பெங்​களூருவை சேர்ந்த தொழில​திபர் ஜதின் ஹுக்​கேரி​யுடன் திரு​மணம் நடந்​தது. அதன்​பிறகு அவர் எங்​களு​டன் பேசுவ​தில்​லை. அவருடைய கணவர் என்ன வேலை செய்​கிறார் எனவும்​ தெரி​யாது. தங்​கம்​ கடத்​தி​ய​தாக வந்​த செய்​தி எனக்​கு பெரும்​ அதிர்​ச்​சி​யை​யும்​ ஏ​மாற்​றத்​தை​யும்​ தந்​தது. அவர்​ தவறு செய்​திருந்​​தால்​ சட்​டப்​படி நடவடிக்​கை எடுக்​கலாம்​” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.