பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் முன்னிலை

பிராக்,

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரக்ஞானந்தா , அமெரிக்காவின் சாம் ஷன்லாந்த் மோதினர்.கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 43-வது நகர்த்தலில் டிரா செய்தார்.

அரவிந்த் சிதம்பரம் 32-வது நகர்த்தலில் வியட்னாமின் லீம் லீவுடன் டிரா கண்டார்.

பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.