பெங்களூரு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த பாடகியை மணந்தார்: அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து

பெங்​களூரு: பெங்​களூரு பாஜக எம்​.பி.​யும், பாஜக இளைஞர் அணி தலை​வரு​மான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்​னாடக சங்​கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிர​சாத்தை நேற்று திரு​மணம் செய்​து​கொண்​டார். பெங்​களூரு​வில் நடந்த இந்த திரு​மணத்​தில் பாஜக மூத்த தலை​வர் பி.எல்​.சந்​தோஷ், தமிழக தலை​வர் கே.அண்​ணா​மலை உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பெங்​களூருவை சேர்ந்த வழக்​கறிஞ​ரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணி​யில் தீவிர​மாக செயல்​பட்​டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்​கள​வைத் தேர்​தலில் பெங்​களூரு தெற்கு தொகு​தி​யில் பாஜக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​றார். இந்​நிலை​யில், இவருக்​கும் தமிழகத்தை சேர்ந்த கர்​னாடக சங்​கீத பாடகி​யான சிவ ஸ்கந்த பிர​சாத்​துக்​கும் சில மாதங்​களுக்கு முன்பு திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றது. பரத நாட்​டிய​மும் கற்​றுள்ள சிவ ஸ்கந்​த​பிர​சாத் சமூக வலைத்​தளங்​களில் லட்​சக்​கணக்​கான ஃபாலோயர்​களை கொண்​டுள்​ளார். பொன்​னி​யின் செல்​வன் – 2 படத்​தில் ‘வீர ராஜ வீரா’ பாடலை கன்​னடத்​தில் பாடி​யுள்​ளார்.

அயோத்தி ராமர்கோயில் திறப்பு விழா​வின்​போது இவர் ராமரைப் பற்​றி பாடிய பாடலை பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் பகிர்ந்து பாராட்​டி​யுள்​ளார். இந்​நிலை​யில், தேஜஸ்வியும் சிவஸ்ரீயும் திரு​மணம் செய்​து​கொண்டு மண வாழ்க்​கை​யில் அடி​யெடுத்து வைத்​துள்​ளனர். தேஜஸ்வி சூர்​யா​வும் சிவஸ்ரீ ஸ்கந்த பிர​சாத்​தும் நண்​பர்​களாக இருந்த நிலை​யில், நேற்று பெங்​களூரு​வில் இரு​வரின் திரு​மண​மும் நடை​பெற்​றது. இந்த திரு​மணத்​தில் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நெருங்​கிய நண்​பர்​கள் மட்​டும் பங்​கேற்​றனர். கர்​நாட​காவை சேர்ந்த மத்​திய அமைச்​சர் வி. சோமண்​ணா, பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை, கர்​நாடக பாஜக தலை​வர் பி.ஒய்​.​விஜயேந்​திரா உள்​ளிட்​டோர் பங்​கேற்​று, மணமக்​களை வாழ்த்​தினர். வரும் 9-ம் தேதி பெங்​களூரு அரண்​மனை மைதானத்​தில் தேஜஸ்வி சூர்யா மற்​றும் சிவ ஸ்கந்தபிர​சாத் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.