மசால் வடையுடன் பக்தர்களுக்கு அன்னதானம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமலுக்கு வந்தது

திரு​மலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் கடந்த 1983-ம் ஆண்டு முதல், அப்​போதைய முதல்​வர் என்​.டி.​ரா​மா​ரா​வின் ஆலோ​சனை​யின் பேரில் திரு​மலை​யில் பக்​தர்​கள் செலுத்​தும் காணிக்கை பணத்தை அரசு வங்​கி​களில் டெபாசிட் செய்​து, அதில் வரும் வட்​டி​யில் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்கி வரு​கிறது. முதலில் தின​மும் 2,000 பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​பட்​டது. தற்​போது ஒரு லட்​சம் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது.

இதற்​காக திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் தின​மும் ரூ.44 லட்​சம் செல​விடு​கிறது. இந்த அன்னதானத்தை பக்​தர்​களும் ஏற்று நடத்​தலாம். நாள் ஒன்​றுக்கு காலை சிற்​றுண்​டிக்கு ரூ.10 லட்​சம், மதி​யம் மற்​றும் இரவு சாப்​பாட்​டுக்கு தலா ரூ.17 லட்​சம் என கட்​ட​ணம் தீர்​மானிக்​கப்​பட்​டுள்​ளது. இதனை நன்​கொடை​யாக வழங்​கும் பக்​தர்​களின் பெயர்​கள் அன்​றைய தினம் டிஜிட்​டல் பலகை​யில் வெளி​யிடப்​படு​கிறது. இதற்​காக பக்​தர்​களும் ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா அன்னதான அறக்​கட்​டளைக்கு லட்​சக்​கணக்​கில் நன்​கொடை வழங்கி வரு​கின்​றனர்.

திரு​மலை மட்​டுமன்​றி, திரு​மலை வைகுண்​டம் க்யூ காம்ப்​ளக்​ஸ், பஸ் நிலை​யங்​கள் மற்​றும் திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில், கோவிந்​த​ராஜர் கோயில், கோதண்​ட​ராமர் கோயில், திருப்​பதி பஸ் மற்​றும் ரயில் நிலை​யங்​கள், மாதவம், நி​வாசம், விஷ்ணு நிவாச தங்​கும் விடு​தி​கள் என பல இடங்​களில் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது. தற்​போது ஆந்​தி​ரா​வில் ஆட்சி மாறியதும், பிஆர்​.​நா​யுடு புதிய அறங்​காவலர் குழு தலை​வ​ராக பொறுப்​பேற்​றுள்​ளார்.
இவருக்கு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு வழங்​கிய ஆலோ​சனை​யின்​படி, நேற்று முதல் திரு​மலை​யில் அன்னதானத்​துடன் மசால் வடை​யும் பக்​தர்​களுக்கு பரி​மாறப்​பட்​டது.

இதுதொடர்​பாக பிஆர். நாயுடு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “முதல்​வரின் ஆலோ​சனை​யின்​படி சோதனை அடிப்​படை​யில் கடந்த ஒரு மாத​மாக பக்​தர்​களுக்கு மசால் வடை​யும் அன்​ன​தானத்​துடன் வழங்​கப்​பட்​டது. இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்ததால், இன்று முதல் (நேற்​று) காலை முதல் மாலை 4 மணி வரை 35 ஆயிரம் மசால் வடைகள் அன்னதானத்​துடன் பரி​மாறப்​படும். இது மெல்ல அதி​கரிக்​கப்​படும்” என்​றார். அன்​ன​தானத்​தில் பாயசம் வழங்​கி​விட்​டால் பக்​தர்​களுக்கு விருந்​தாக அமைந்து விடும் என பலர் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.