லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்தி வழிஅனுப்ப சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது “நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. ‘incredible India’ போல நான் ‘incredible ilayaraja’. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்ல, வந்ததும் இல்ல” என்று பெருமிதத்துடன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இளையராஜாவின் மூத்தமகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, “அப்பாவோட இசையில நம்ம தமிழ் மக்கள் உருகியிருக்காங்க. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஊருக்குப் போய் அங்கேயே டேக்கா காண்பிக்கிற மாதிரி, நம்ம ஊர் ஆள் அங்க சிம்பொனி அரங்கேற்றுவது தமிழனாக ரொம்பப் பெருமையாக இருக்கு.
இன்றைக்கு நம்ம தமிழ் இசை உலகமெல்லாம் பிரபலமாகியிருக்கு. நானும் எல்லார்மாதிரியும் சராசரியான இளையராஜா ரசிகன்தான். சிம்பொனி என்பது மெற்கத்தியர்களின் பாரம்பரிய இசை. அதை மொஸார்ட், பீத்தோவன் போன்றவர்கள் ரொம்ப நுணுக்கமாகப் பண்ணியிருக்காங்க.

அந்த மாதிரி நம்மளும் சிம்பொனியை அரங்கேற்றனும்னு அப்பாவுக்கு ரொம்ப நாள் ஆசை. நம்ம இளையராஜா சிம்பொனி அரங்கேற்றுவதை தமிழ் மக்களும் அந்த அரங்கில் நிறைந்து கேட்கனும்னு எனக்கு ஆசை. நிச்சயமாக அதை இங்கையும் அவர் வாசிப்பார். அதை நம்ம கேட்போம். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
