சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், வைகை, பல்லவன், செந்தூர் விரைவு ரயில் உள்பட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: புதுச்சேரி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (16116), செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலை – தாம்பரத்துக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் (66034), கடற்கரை – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் விரைவு ரயில் (12606), தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
திருநெல்வேலி – எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் (20666), மாம்பலம் – எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. மதுரை – எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.45 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் (12636), தாம்பரம் – எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. எழும்பூர் – குருவாயூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16127), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 10.50 மணிக்கு புறப்படும்.
சென்னை எழும்பூர் – மதுரைக்கு மார்ச் 9-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் (12635), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர் – திருநெல்வேலிக்கு மார்ச் 9-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் விரைவு ரயில் (20665), சென்னை எழும்பூர் – மாம்பலம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் மாம்பலத்தில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும். எழும்பூர் – காரைக்குடிக்கு மார்ச் 9-ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய பல்லவன் விரைவு ரயில் (12605), எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். சில ரயில்கல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையிலும் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 20 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.