Mookuthi Amman 2: `பட்ஜெட்னு மூணு விரலை காமிச்சாரு; Pan India-ல ஒரு அம்மன் படம்' – ஐசரி கணேஷ்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் `மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படம் உருவாகவிருக்கிறது.

மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜினா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

சுந்தர்.சி

இப்படத்திற்கு இன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோஸில் பூஜை போடப்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து படத்தினுடைய முதல் ஷாட்டையும் சுந்தர். சி இங்கு எடுத்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ஐசரி.கே. கணேஷ் பேசுகையில், “5 வருஷத்துக்கு முன்னாடி ` மூக்குத்தி அம்மன்’ படத்தை எடுக்கணும்னு சகோதரர் ஆர்.ஜே. பாலாஜி சொன்னாரு. எங்களுடைய குல தெய்வமும் முக்குத்தி அம்மன்தான். பெயரை சொன்னதும் எனக்கு ரொம்ப பிடிச்சு உடனடியாக ஆரம்பிக்கலாம்னு சொன்னேன். அம்மனாக நயன்தாரா நடிச்சால் நல்லா இருக்கும்னு எங்களுடைய ஒரே எண்ணமாக இருந்தது. முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுக்கப்புறம் இந்த ஐந்து வருஷத்துல அம்மன் படம் எதுவும் வரல. பேன் இந்தியாவாக ஒரு அம்மன் படத்தை எடுக்கணும்னு எங்க வேல்ஸ் டீம்ல யோசிச்சோம். அப்போ எங்களுடைய எண்ணத்துல இருந்த ஒருத்தர் சுந்தர்.சி சார்தான். அவரை `பிரான்சைஸ் கிங்’னு சொல்லலாம். `அரண்மனை’, `கலகலப்பு’னு அடுத்தடுத்த பாகங்களை வெற்றி திரைப்படமாக கொடுத்துட்டு இருக்காரு.

ஐசரி கே. கணேஷ்

`மூக்குத்தி அம்மன் 2′ பற்றி அவர்கிட்ட பேசினப்போ, அவர் எங்ககிட்ட ஒரு மாதம் டைம் கேட்டாரு. ஒரே மாசத்துல பிரமாதமான கதையை எங்ககிட்ட சொன்னாரு. அந்த மாதிரியான கதையை நான் கேட்டது இல்ல. அதன் பிறகு படத்தினுடைய பட்ஜெட்னு மூணு விரலைக் காமிச்சாரு. மூணு டிஜிட் பட்ஜெட்லதான் இந்த படத்தை பண்ணமுடியும், ரிலீஸை பேன் இந்தியாவாக எடுத்துட்டுப் போகலாம்னு சொன்னாரு. இப்போ `மூக்குத்தி அம்மன் 2′ படத்துல அம்மனாக நடிக்கிறதுக்காக நயன்தாரா ஒரு மாதமாக விரதம் இருக்கிறாங்க. அதுபோலதான் முதல் பாகத்திற்கும் விரதம் இருந்தாங்க. இப்போ ஒரு வாரமாக அவங்க வீட்டுல அவங்களோட குழந்தைகள் உட்பட எல்லோரும் விரதமிருக்காங்க. நயன்தாரா இந்தப் படத்துல நிச்சயமாக அம்மனாக வாழப்போறாங்க.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.