கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியான வீரபெருமாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அவருக்கு சொந்தமான, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள […]
