பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு 55 லட்சம் வெளிநாட்டினர் வருகை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் நகரில் ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 45 நாட்​கள் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வில் பக்​தர்​கள் தங்​கு​வதற்கு கூடார நகரம் அமைக்​கப்​பட்​டது. இதில் நட்​சத்​திர விடு​தி​களின் வசதி​களை உ.பி. அரசு செய்​திருந்​தது. மாநில சுற்​றுலா கழகத்​தின் திரிவேணி சங்கம கரை காலனி​யில் 2,100 கூடாரங்​கள், 110 தனிக்​குடில்​கள் கட்​டப்​பட்​டிருந்​தன. இவற்​றில் தங்​கு​வதற்கு இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் இணை​யதளத்​தில் முன்​ப​திவு செய்​தனர்.

சர்​வ​தேச தரத்​தில் நவீன வசதி​களு​டன் கூடாரங்​களின் அறை​கள், குடில்​கள் இருந்​த​தால், லட்​சக்​கணக்​கான வெளி​நாட்​டினரும் இங்கு வந்து தங்​கினர். இந்​நிலை​யில், தங்​கும் கூடாரங்​கள், உணவு விடு​தி​கள் என மாநில சுற்​றுலா கழகத்​துக்கு மட்​டும் சுமார் ரூ.100 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ள​தாக அரசு தெரி​வித்​துள்​ளது. மேலும் மகா கும்​பமேளா நடை​பெற்ற 45 நாட்​களில் தனி​யார் கூடாரங்​களுக்​கும் ரூ.73 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இந்த தொகை இறுதி கணக்​கீட்​டுக்கு பிறகு மேலும் உயரும் என்று தெரி​கிறது.

இது​போன்ற நடவடிக்​கைகளால் முதல் முறை​யாக, பிர​யாக்​ராஜ் நகர் சர்​வ​தேச சுற்​றுலா வரைபடத்​தில் இடம் பெற்​றுள்​ளது. மேலும் மகா கும்​பமேளா​வால் உலக சுற்​றுலா நிகழ்ச்​சிகளின் அனைத்து சாதனை​ களும் முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. சுமார் 55 லட்​சம் வெளி​நாட்டு சுற்​றுலாப் பயணி​கள் மகா கும்​பமேளாவுக்கு வந்​துள்​ளனர்.

கடந்த 144 ஆண்​டு​களுக்கு பிறகு நடைபெறும் மகா கும்​பமேளா என்​ப​தால், பல வழிகளில் வரலாறு படைத்​துள்​ளது. இங்கு 73 நாடு​களின் தூதர்​கள், 116 நாடு​களின் பக்​தர்​கள் திரிவேணி சங்​கமத்​தில் புனித நீராட வந்​தனர். நேபாளம், அமெரிக்​கா, பிரிட்​டன், இலங்​கை, கனடா, வங்​கதேசம், ரஷ்​யா, ஜப்​பான், ஜெர்​மனி, பிரான்​ஸ், பிரேசில், மலேசி​யா, நியூசிலாந்​து, இத்​தாலி, தாய்​லாந்து உள்​ளிட்ட 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்​தவர்​களும் இடம்​பெற்​றிருந்​தனர்.

கும்​பமேளா​வுக்கு வந்த வெளி​நாட்​டினர் அரு​கில் உள்ள வாராணசி, அயோத்​தி, சித்​ரகூட், மதுரா மற்​றும் கோரக்​பூருக்​கும் விஜ​யம் செய்​தனர். இதனால் அங்​கும் உணவு விடு​தி​கள், வழி​காட்​டிகள், தனி​யார் போக்​கு​வரத்​து மற்​றும் உள்​ளூர் வணி​கர்​கள் அதிக வரு​வாய் ஈட்​டி​யுள்​ளனர். உ.பி.​யின் சீதாபூர் மாவட்​டத்​தில் உள்ள நைமிஷாரண்​யம் மற்​றும் பிர​யாக்​ராஜ் ஆகியவை மத்​திய அரசின் ‘சுதேசி தர்​ஷன்​-2’ திட்​டத்​தில் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளன. இது இந்​தி​யா​வின் கலாச்​சார சுற்​றுலாவை புதிய உயரத்​துக்​கு கொண்​டு செல்​லும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.