Sunil Gavaskar Slams Rohit Sharma : இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் சாம்பியன்ஸ் கோப்பைக்காக விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு முக்கியமான அறிவுரையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வழங்கியுள்ளார். ரோகித்சர்மா பேட்டிங் ஒழுங்காக விளையாடவில்லை, அவருடைய மோசமான பார்ம் தொடர்ந்து கொண்டிருக்கிறது, இது குறித்து அணி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.
ரோகித் சர்மா மோசமான பேட்டிங்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா இதுவரை சொல்லும்படியான ஒரு இன்னிங்ஸ் கூட விளையாடவில்லை. தொடர்ந்து மோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் அவர், தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையில் கட்டாயம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, ” ரோகித் சர்மா கடந்த 2 ஆண்டுகளாக அதிரடி ஆட்டத்தை விளையாட முயற்சிக்கிறார். ஆனால் அவரின் அணுகுமுறை ஒரு சில போட்டிகளை தவிர பெரிதாக இந்திய அணிக்கு உதவ வில்லை. மோசமான பார்மில் அவர் ஆடிக் கொண்டிருக்கிறார். அதனால் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பெரிய இன்னிங்ஸ் தேவை
குறைந்தபட்சம் 25 ஓவர்களாவது அவர் விளையாட முயற்சிக்க வேண்டும். வெறும் 20, 30 ரன்களுக்கு அவுட்டாவதை வாடிக்கையாக கொள்ள கூடாது. அந்த ரன்களில் பெரிதாக சாதித்துவிட்டதுபோல் உணரக்கூடாது. ஒருநாள் போட்டி பார்மேட்டில் நிலைத்து நின்று விளையாடுவது தான் அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனை பயிற்சியாளர் கம்பீர் கவனத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. மாறாக ரோகித் சர்மா அணுகுமுறைக்கு அவர் சப்போர்ட் செய்துகொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தன்னுடைய திறமைக்கு ஏற்ற அளவில் விளையாடவில்லை என்றே கூறுவேன். அவர் 25, 30 ஓவர்கள் ஆடினால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடிக்கும். முதல் பேட்டிங் மற்றும் சேஸிங் என எதுவாக இருந்தாலும் இந்திய அணிக்கு சுபலமாக இருக்கும். அதனை ரோகித் செய்வது போல தெரியவில்லை” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேவையில்லாத பிளேயர்
ஒரு பிளேயராக ரோகித் சர்மா அணிக்கு போதுமான பங்களிப்பை கொடுப்பதில்லை என ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். இதனால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியிலாவது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.