கொல்கத்தா,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் – எப்.சி. கோவா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மோகன் பகான் அணி சார்பில் போரிஸ் சிங் ஆட்டத்தின் 62-வது நிமிடத்திலும், கிரெக் ஸ்டீவர்ட் 90+4வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கோவா அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.