மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணி 225 ரன்கள் குவிப்பு

லக்னோ,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்றிரவு லக்னோவில் நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் – பெங்களூரு மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார் . அதன்படி உ.பி.வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கம் முதல் உ.பி.வாரியர்ஸ் அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஜார்ஜியா வால் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் . அவர் அரைசதமடித்து 99 ரன்கள் எடுத்தார். கிரண் நவ்கிரே 46 ரன்களும் , கிரேஸ் ஹாரிஸ் 39 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு உ.பி.வாரியர்ஸ் அணி 225 ரன்கள் எடுத்தது . தொடர்ந்து 226 ரன்கள் இலக்குடன் பெங்களூரு விளையாடுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.