நேற்று நடந்த ‘முதல்வரின் கலைக்களம் – மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற திமுக நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, “இது மக்கள் முதல்வரின் மனிதநேய விழா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சங்கமம் என்ற நிகழ்ச்சி மூலம் பல கலைகளை ஊக்குவிச்சாங்க. இப்போ முதல்வரின் பிறந்தநாளையொட்டி மீண்டும் இந்த விழா நடத்தப்படுது.

சினிமா வந்தப்பிறகு நாட்டுப்புற கலை உள்ளிட்ட பல கலைகள் அழிஞ்சுட்டு வருது. ஆனா, அது இன்னமும் வாழுது என்பதைக் காட்ட பல திறமையான கலைஞர்களை அழைத்து இந்த விழா நடந்துகிட்டு இருக்கு. அந்தக் கலைஞர்களுக்கு தான் இது எவ்வளவு பெரிய ஊக்குவிப்புன்னு தெரியும். இந்த விழா அவங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்.
இப்படி எனக்கு ஸ்கூல், காலேஜ்ல கிடைச்ச ஊக்குவிப்புனால தான், இப்போ நான் இசையமைப்பாளரா ஆகியிருக்கேன். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் முதல்வருக்கு நன்றி. சேகர்பாபு சார் சொன்ன மாதிரி நீங்க (முதல்வர்) 100 வருசம் நல்லா வாழணும். இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டதில் மகிழ்ச்சி” என்று பேசியுள்ளார்.