கலிபோர்னியாவில் இந்து கோயில் மீது தாக்குதல்: மத்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம்

புதுடெல்லி: கலி​போர்​னி​யா​வில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் நேற்று தாக்​குதல் நடத்தி உள்​ளனர்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயி​லான பாப்ஸ் ஸ்ரீ சுவாமி நாராயண் மந்​திர் மீது மர்ம நபர்​கள் சிலர் நேற்​று​முன்​தினம் தாக்​குதல் நடத்​தினர். இதில் கோயில் சேதம் அடைந்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்சக இணை​யதளத்​தில் வெளி​யான பதி​வில் செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் கூறும்​போது, “சினோ ஹில்ஸ் பகு​தி​யில் இந்து கோயில் மீது தாக்​குதல் நடந்​தது குறித்த தகவல்​களை அறிந்​தோம். கீழ்த்​தர​மான இது​போன்ற தாக்​குதல்​களை வன்​மை​யான சொற்​களால் கண்​டிக்​கிறோம். இதில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று உள்​ளூர் அதி​காரி​களை வலி​யுறுத்தி உள்​ளோம். அத்​துடன் வழி​பாட்டு தலங்​களுக்கு போதிய பாது​காப்பு வழங்​கும்​படி​யும் கேட்​டுக் கொண்​டுள்​ளோம்” என்று கூறி​யுள்​ளார்.

முன்​ன​தாக தாக்​குதல் குறித்து பாப்ஸ் சுவாமி நாராயண் மந்​திர் மக்​கள் விவ​காரப் பிரிவு தனது அதி​காரப்​பூர்வ எக்ஸ் வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “மீண்​டும் ஒரு இந்து கோயில் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. இந்த முறை சினோ ஹில்ஸ் பகு​தி​யில் உள்ள சுவாமி நாராயண் கோயில் மீது தாக்​குதல் நடந்​துள்​ளது. பிரி​வினை, கருத்து வேறு​பாடு​களை விதைக்​கும் எந்த செயலை​யும் நாங்​கள் கடுமை​யாக எதிர்ப்​போம். வெறுப்​புணர்வை தூண்​டும் எந்த செயலை​யும் வன்​மை​யாக கண்​டிக்​கிறோம். வெறுப்​புணர்வு வேரூன்ற விடமாட்​டோம். எங்​களு​டைய பொது​வான, மனித நேயம், நம்​பிக்கை போன்​றவை அமை​தி, இரக்​கத்தை உறு​திப்​படுத்​தும்” என்று தெரி​வித்​துள்​ளது.

கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் நியூ​யார்க் நகரில் உள்ள பாப்ஸ் மந்​திர் மீது மர்ம நபர்​கள் தாக்​குதல் நடத்​தினர். அதற்கு சில நாட்​களுக்​குப் பிறகு செப்​டம்​பர் 25-ம் தேதி கலி​போர்​னி​யா​வின் சேக்​ரமென்டோ பகு​தி​யில் உள்ள சுவாமி நாராயண் மந்​திர் மீது தாக்​குதல் நடந்​தது. இந்​நிலை​யில் தற்​போது சினோ ஹில்​ஸ் பகு​தி​யில் உள்ள கோயில் மீது மர்ம நபர்​கள் தாக்​குதல்​ நடத்​தி​யிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.