புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நெஞ்சு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
73 வயதான தன்கர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை இதயவியல் துறைத் தலைவர் ராஜீவ் நராங்க் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் (சிசியு) அனுதிக்கப்பட்டார்.
குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, குடியரசு துணைத் தலைவரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றார்.