ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வரும் நிலையில் பிப்ரவரி 2025யில் 3,85,988 எண்ணிக்கையை ஹீரோ மோட்டோகார்ப் பதிவு செய்துள்ள நிலையில் ஹோண்டா இரண்டாவது இடத்தில் சுமார் 3,28,502 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக FADA இந்தியா தெரிவித்துள்ளது.
முந்தைய பிப்ரவரி 2024 மாதத்துடன் ஒப்பீடுகையில் ஹீரோ விற்பனை எண்ணிக்கை 4,14,151 யூனிட்டுகளை பதிவு செய்திருந்த நிலையில் தற்பொழுது 28,000 யூனிட்டுகள் வரை குறைந்து மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. ஆனால் ஹோண்டா நிறுவனம், 28,000க்கு கூடுதலான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிப்ரவரி 2025ல் 2,53,499 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய 2024 பிப்ரவரியில் 2,48,621 ஆக பதிவு செய்திருந்தது. நான்காவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,53,631 பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக, சுசூகி நிறுவனம் 76,673 ஆக பதிவு செய்துள்ளது.
இதனை அடுத்து மற்ற நிறுவனங்களான ராயல் என்ஃபீல்டு, யமஹா, ஏதெர், ஓலா எலக்ட்ரிக் போன்றவை உள்ளது. ஒட்டுமொத்த பிப்ரவரி 2025 விற்பனை எண்ணிக்கை 13,53,280 ஆக பதிவு செய்துள்ள நிலையில், முந்தைய பிப்ரவரி 2024யினை விட 1,07,000க்கு கூடுதலான யூனிட்டுகளை பதிவு செய்திருந்தது.