சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. நியூசிலாந்து அணியே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்கள் அடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கி விளையாடி வருகிறது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியின் மூலம் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா – வில் யங் ஓர் புதிய சாதனை படைத்துள்ளனர்.
நியூசிலாந்து அணி சார்பில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா – வில் யங் சிறப்பான தொடக்கத்தையே அளித்தனர். ரச்சின் ரவீந்திரா வரிசையாக பவுண்டரிகள் அடித்து ரன்களை சேர்த்தார். அவர் ஒரு சிக்சரும் அடித்தார். 29 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது, முதல் விக்கெட்டுக்கு நியூசிலாந்து அணி 57 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிங்க: IND vs NZ: நியூசிலாந்து இறுக்கிப் பிடித்த ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 80% வெற்றி உறுதி!
ஐசிசி நாகவுட் வரலாற்றிலேயே இதுவே நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி எடுத்த இரண்டாவது சிறந்த கூட்டணி ரன்கள் ஆகும். முன்னதாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை அரை இறுதியில் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் மார்ட்டின் கப்தில் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் அது அரை இறுதி போட்டி ஆகும்.
தற்போது முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஜோடி ரச்சின் – வில் யங் 57 ரன்கள் எடுத்துள்ளனர். மேலும், இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையும் படைத்துள்ளனர். நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் எந்த ஒரு அணியின் தொடக்க ஜோடியும் இந்திய அணிக்கு எதிராக 50 ரன்களுக்கு அதிகமாக எடுத்ததில்லை. இந்த நிலையில், ரச்சின் மற்றும் வில் யங் இறுதி போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். இருப்பினும், இந்திய அணி ஸ்பின்னர்களின் வருகைக்கு பிறகு நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.
மேலும் படிங்க: IND vs NZ Final: மிகப்பெரிய 3 சாதனைகளை படைக்க இருக்கும் கோலி.. என்னென்ன தெரியுமா?