சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி இன்று (மார்ச் 09) துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தியா – நியூசிலாந்து மோதும் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 மிகப்பெரிய சாதனைகளை படைக்க இருக்கிறார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
இந்திய அணியின் நம்பிக்கை வீரர் விராட் கோலி, நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 84 ரன்கள் அடித்திருந்தார். இப்படி இத்தொடரில் இதுவரை 217 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில், விராட் கோலிக்கு தற்போது மிகப்பெரிய ஒரு சாதனை படைக்க இந்த இறுதி போட்டியில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதிக ரன்கள் அடித்தால் சாதனை
சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் வைத்திருக்கிறார். அவர் 17 இன்னிங்ஸ்களில் 791 ரன்கள் குவித்துள்ளார். அதேசமயம் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 746 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இந்த இறுதி போட்டியில் 46 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
மேலும் படிங்க: IND vs NZ: இன்று தோற்றாலும் ஜெயித்தாலும்… ஓய்வை அறிவிக்கும் இந்த 4 இந்திய வீரர்கள்
தங்க பேட்
அதேபோல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரருக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4 இன்னிங்ஸ் விளையாடி 217 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.
இப்பட்டியலின் முதல் இடத்தில் ரச்சின் ரவீந்திரா 228 ரன்களுடனும், பென் டக்கட் 227 ரன்களுடனும், ஜோ ரூட் 225 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளார். இந்த சூழலில் இந்த இறுதி போட்டியில் விராட் கோலி, ரச்சின் ரவிந்திரா எத்தனை ரன் அடிக்கறாரோ அதைவிட இவர் 9 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும். அப்படி அடித்தால் பட்டியலில் முதல் இடத்திற்கு வருவார். அதன் மூலம் அவர் தங்க பேட் பரிசாக வழங்கப்படும்.
நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்
இதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார். அவர் 41 இன்னிங்ஸ்களில் 1760 ரன்கள் அடித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் விராட் கோலி 1656 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில், அவர் 105 ரன்கள் அடித்தால் இப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.
மேலும் படிங்க: இந்திய அணியின் சாம்பியன்ஸ் டிராபி கனவை தீர்மானிக்கும் டாஸ்!! – வெற்றி பெறக் கூடாது