இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார் ஜக்தீப் தன்கர் (வயது 73).
இன்று அதிகாலை 2 மணியளவில் ஜகதீப் தன்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் சிகிச்சை நடந்து வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜீவ் நரங் தலைமையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, ஜகதீப் தன்கர் நலமாக உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது என்று கூறப்படுகிறது.