Kushboo – Sundar.C : `லவ் யூ சுந்தரா!' 25-வது திருமண நாள் குறித்து குஷ்பு நெகிழ்ச்சிப் பதிவு

சுந்தர். சி – குஷ்பு தம்பதிக்கும் 25-வது திருமண நாள் இன்று!

இன்று காலை பழநி முருகன் கோயிலில் இயக்குநர் சுந்தர்.சி முடிகாணிக்கைச் செலுத்தி நேர்த்திக் கடனைச் செலுத்தியிருந்தார். 25-வது திருமண நாளைக் கொண்டாடும் வகையில் குடும்பத்துடன் பழநி முருகன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார் சுந்தர்.சி. இதனையடுத்து அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் , தங்களுடைய திருமணத்தன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருகிறார் குஷ்பு.

அந்தப் பதிவில் அவர், “ 25வது திருமண நாள் வாழ்த்துகள். நீங்களும் நானும் எப்போதும் ஒன்றுதான்! லவ் யூ சுந்தரா. சில மாற்றங்களைச் செய்து என்னுடைய திருமணப் புடவையை 25-வது திருமண நாளில் அணிந்திருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். பழநி முருகனின் ஆசியுடன் இந்த நாளைத் தொடங்கியிருக்கிறோம். இன்று எங்களிடம் இருக்கும் விஷயங்கள் அனைத்தும் பழநி முருகனின் ஆசியில்லாமல் சாத்தியமாகியிருக்காது!” என நெகிழ்ந்துப் பதிவிட்டிருக்கிறார்.

சுந்தர். சி இயக்கத்தில் உருவாகவிருக்கிற `மூக்குத்தி அம்மன் 2′ படத்தின் பூஜை கடந்த வாரம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதனைத் தாண்டி சுந்தர்.சி இயக்கியிருக்கும் `கேங்கர்ஸ்’ திரைப்படமும் அடுத்த மாதம் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.