StartUp: தொழில் முனைவோர் வெற்றிக்கு வழிகாட்டும் JCOM; மதுரையில் ஒரு நாள் நிகழ்ச்சி.. என்ன ஸ்பெஷல்?

தொழில்துறையில் சாதித்தவர்கள், சாதிக்க உள்ளவர்களை ஒன்றிணைத்து தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் JCOM (Jaycees chamber of commerce) தொழில்துறையினர், ஆலோசகர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் பிரமாண்ட நிகழ்வினை மதுரையில் நடத்துகிறது.

ஸ்டார்ட் அப்

சர்வதேச அளவில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் JCI அமைப்பிலுள்ள தொழில்துறையினரையும், தொழில் முனைவோரையும் ஒருங்கிணைத்து தொழிலிலில் வெற்றி பெற பல பயிற்சிகளை வழங்கி தொடர்புகளையும் ஏற்படுத்தி கொடுக்கிறது.

அந்த வகையில் JCOM L MADURAI 1.0 சார்பில் தங்களின் 150-வது வார விழாவை THRIVE என்ற பெயரில் மார்ச் 15 ஆம் தேதி மதுரை பரவையிலுள்ள ஆகாஷ் கிளப்பில் நடத்துகிறது.

இந்த நிகழ்வில் நெட் ஒர்க்கிங் செய்து நம் தொழிலை அடுத்த கட்டத்துக்கு எப்படி எடுத்துச்செல்வது? காண்டாக்ட் பில்டிங் எப்படி அமைப்பது? குறித்து சேரன் அகடாமியின் விநியோக வியூக வகுப்பாளர் ஹுசேன் அகமது, கமலம் வெஞ்சர்ஸ் நிறுவனர் ஜேகே முத்து ஆகியோர் உரை நிகழ்த்துகிறார்கள். தொழில்துறையினரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறார்கள்.

தொழில்துறை விழா

இந்த நிகழ்வில் தொழில்துறையில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், புத்தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், டிரேடர்ஸ், சில்லறை மற்றும் மொத்த வணிகர்கள், சேவைத் தொழில் செய்வோர் கலந்து கொள்கிறார்கள்.

மகிழ்ச்சி சாஃப்ட்வேர்ஸ், ஜி நோட், ஸ்ரீ அபிநயா ஜூவ்வல்லர்ஸ் ஸ்பான்சர் செய்யும் இந்த நிகழ்வில், நாணயம் விகடன் மீடியா பார்ட்னராகவும் எஸ்.பி.ஐ பேங்கிங் பார்ட்னராகவும் செயல்படுகிறது. மேலும், கோ-ஸ்பான்சர்களாக ஸ்ரீ ஜெயம் ஜூவல்லர்ஸ், சாஸ்தா ஸ்வீட்ஸ், பி.ஆர்.ஹாஸ்பிடல், எம்.கே டிரேடிங் கம்பெனி, லெனோவோ, பாண்டியன் பிக்கிள்ஸ், வி ஸ்மார்ட் அசோசியட்ஸ், ஏ.ஆர் வர்ணம் டிரேடர்ஸ், ஷார்ப் கம்ப்யூட்டர்ஸ் , ஏஞ்சல்ஸ் ஃபிஷ் பிக்கிள்ஸ், ஸ்ரீ காயத்ரி எண்டர்பிரைசஸ், ஹெச்.எம்.எஸ் இண்டீரியர் ஒர்க்ஸ், எஸ்.எஸ்.கே டூர்ஸ், விக்னேஷ் கிராபிக்ஸ் பங்களிக்கின்றன.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புவோர் 98654 10520, 88809 26765, 98439 46697 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.