கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பேருந்து நிலையப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட பாஜக வினரை காவல்துறையினர் கைது செய்தனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும், மது பிரியர்களால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த டாஸ்மாக் கடைகளை […]
