சிபிஎஸ்இ கல்வியில் படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டமாக கூறியுள்ளனர். தேனி கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த ஜெயக்குமார் என்பவர் தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மின்வாரிய இளநிலை உதவியாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்களை ஏன் […]
