சுற்றுலா மற்றும் புனித ஸ்தலங்களைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சோப்புகள், சலவை மருந்துகள் மற்றும் ஷாம்புகளை விற்பனை செய்வதைத் தடை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆறுகள் மற்றும் குளங்களை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் குளங்கள், கோயில் குளங்களுக்கு அருகில் சோப்புகள் மற்றும் ஷாம்புகள் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகளை இந்த நீர்நிலைகளில் விட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் அமைச்சர் […]
