ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் ரூ.2.15 லட்சத்தில் துவங்குகின்ற 2025 ஹோண்டா CB350 மாடலில் புதிய நிறங்களுடன் கூடுதலாக OBD-2B மேம்பாட்டினை பெற்ற எஞ்சினை கொண்டுள்ளது.
தொடர்ந்து இந்த மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று, பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன் இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாக அமைந்துள்ளது. கூடுதலாக டாப் மாடலில் ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போன் இணைப்பினை ஏற்படுத்தி அழைப்புகள், மியூசிக், நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான சிபி350 பைக்கில் 348.36cc லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 bhp பவர் மற்றும் 3000 RPM-ல் 30Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.
இந்த மாடலுக்கு DLX Pro டாப் வேரியண்டில் மேட் டியூன் பிரவுன், கிரெஸ்ட் மெட்டாலிக், ரெட் மெட்டாலிக், பச்சை, கருப்பு போன்ற நிறங்களை தற்பொழுது பெற்றதாக அமைந்திருப்பதுடன் பல்வேறு கஸ்டமைஸ் கிட் ஆப்ஷனும் உள்ளது.
2025 Honda CB350 Price list
- DLX – ₹ 2,15,622
- DLX Pro Dual tone – ₹ 2,18,621
(ex-showroom)