நடிகை அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்திருக்கிறது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிநயா. ‘ஈசன்’, ‘குற்றம் 23’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘பனி’ படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அடுத்ததாக தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒருவரை 15 ஆண்டுகளாக காதலித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த நபர் யார் என்று கூறவில்லை. இந்நிலையில் அபிநயாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் அபிநயா அறிவித்திருக்கிறார். விரைவில் திருமணம் நடைபெறவுள்ள அபிநயாவிற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…