IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 12 நாள்களே இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்தியா கைப்பற்றிவிட்டதால் அனைத்து முக்கிய வீரர்களும் மீதும் அதிக கவனம் குவிந்துள்ளது.
IPL 2025: இந்த 5 அணிகள் மீது அதீத எதிர்பார்ப்பு
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 பேரும் 5 ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருக்கிறார்கள். அப்படியிருக்க இவர்கள் கேப்டன்களாக இருக்கும் முறையே குஜராத், மும்பை, லக்னோ, டெல்லி, பஞ்சாப் அணிகள் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்தான் கேகேஆர் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பதாலும், ரிக்கி பாண்டிங் உடன் மீண்டும் இணைந்திருப்பதாலும் டபுள் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
IPL 2025: கப் அடிப்பாரா கேஎல் ராகுல்?
அதேபோல், சாம்பியன்ஸ் டிராபியில் சைலண்ட் ஹீரோவாக செயல்பட்ட கேஎல் ராகுல் தான் தலைமை தாங்கும் டெல்லி அணிக்கு எந்தளவிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க இருக்கிறார் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர். டெல்லி அணியின் முதல் ஐபிஎல் கோப்பையை கேஎல் ராகுல் பெற்றுக் கொடுப்பாரா என்ற கேள்வியும் பலரிடத்தில் உள்ளது. அவர் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
IPL 2025: கேஎல் ராகுல் சில போட்டிகளை தவறவிடுவார்
இந்நிலையில், கேஎல் ராகுல் தொடக்க கட்ட ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவருக்கு பதில் டெல்லி அணியின் கேப்டன்ஸி சில நாள்களுக்கு வேறு வீரருக்கு ஒப்படைக்கப்படலாம் என கூறப்படுகிறது. கேஎல் ராகுல் – அதியா ஷெட்டி விரைவில் முதல் குழந்தை பிறக்க உள்ளதால் ஓரிரு போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என கூறப்படுகிறது.
அதாவது, மார்ச் 24ஆம் தேதி டெல்லி அணி லக்னோவை எதிர்கொள்கிறது. அதேபோல், மார்ச் 30ஆம் தேதி ஹைதராபாத் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளையும் கேஎல் ராகுல் தவறவிடுவார் என கூறப்படுகிறது. இவருக்கு பதில் யார் கேப்டன்ஸியை பெறுவார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
IPL 2025: டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் யார்?
பெரும்பாலும் இந்திய டி20 அணியின் துணை கேப்டனான அக்சர் பட்டேலிடமே முதலிரு போட்டிகளுக்கான கேப்டன்ஸி பொறுப்பு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பனிங்கில் கேஎல் ராகுல் இல்லாததால் டெல்லி அணி இரு வெளிநாட்டு வீரர்களை ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும்.
ஜேக்-பிரேசர்-மெக்கர்க் மற்றும் பாப் டூ பிளெசிஸ் ஓப்பனிங்கில் வருவார்கள் எனலாம். தற்போது ஹாரி ப்ரூக்கும் இல்லாததால் உடனடியாக அவருக்கு மாற்று வீரரை டெல்லி அணி தேர்வு செய்ய வேண்டியதாக உள்ளது.
டெல்லி அணியின் உத்தேச பிளேயிங் XII
(கேஎல் ராகுல் இல்லாமல்): ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக் பிரேஸர், கருண் நாயர், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார். இம்பாக்ட் வீரர்: அஷுடோஷ் சர்மா