2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு இடி மேல் இடியாக சில அதிர்ச்சிகரமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரத்திற்கு பங்கேற்க மாட்டார் என்ற செய்தி வெளியானது. இந்த இந்த நிலையில், மற்றொரு வீரர் தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.
ஹாரி புரூக் விலகல்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தான் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். அவர் கடந்த ஐபிஎல் தொடரில் இருந்தும் கடைசி நேரத்தில் விலகினார். அப்போதும் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். தனது சொந்த விஷயம் காரணமாக ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு விலகினார்.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா! கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இப்படி வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதால், இம்முறை பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, ஒரு வீரர் ஏலத்தில் ஒரு அணியால் வாங்கப்பட்டு, பின்னர் ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பு சரியான காரணம் இன்றி விலகினால், அவர் அடுத்த இரண்டு ஐபிஎல் தொடர்களுக்கு தடை செய்யப்படுவார்.
2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு
அந்த வகையில், தற்போது காயம் என்ற எவ்வித நியாயமான காரணமும் இன்றி ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதால், அவருக்கு அடுத்த 2 ஐபிஎல் தொடர்களுக்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில், ஹாரி புரூக்கால் 2027 ஐபிஎல் தொடர் வரை விளையாட முடியாது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து தடை விதிக்கப்பட உள்ள முதல் வெளிநாட்டு வீரராக ஹாரி புரூக் மாறி உள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த ஹாரி புரூக், அடுத்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியம் என்பதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.
மேலும் படிங்க: Rohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!