மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியஸ்ன் டிராபி தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 09) முடிவடைந்தது. இத்தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இதனால் இந்திய அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் மற்ற அணிகள் லீக் போட்டிகளில் மோத உள்ளன. லீக் ஆட்டத்திற்கு பிறகு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா மைதானங்களில் நடைபெற இருக்கிறது.
மே 20ஆம் தேதி குவாலிஃபையர் 1 நடைபெறும். இப்போட்டி ஹைதராபத்திலும், குவாலிஃபையர் 2 மே 23ஆம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. இறுதி போட்டியானது மே 25ஆம் தேதி கொல்க்கத்தாவிலே நடைபெறுகிறது. இந்த நிலையில், ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகள் மற்றும் வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதால், டிக்கெட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனை தற்போது ஆன்லைனில் தொடங்கி இருக்கிறது. புக் மை ஷோ, Paytm Insider மற்றும் ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ரசிகர்கள் டிக்கெட்களை வாங்கி கொள்ளலாம்.
மேலும் படிங்க: IPL 2025: கேப்டன் பதவியை நிராகரித்த கே.எல்.ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணி
IPL டிக்கெட் பார்ட்னர்கள்
சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK), குஜராத் டைட்டன்ஸ் (GT), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC), பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளின் டிக்கெட் பார்ட்னராக Paytm Insider உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (MI), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG), ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளின் டிக்கெட் பார்ட்னர்களாக Book My Show உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பார்ட்னராக TicketGenie உள்ளது.
ஆன்லைனில் டிக்கெட்டை பெறுவது எப்படி?
முதலில் BookMyShow, Paytm Insider, TicketGenie அல்லது IPL அணியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்குள் செல்லவும்.
எந்த போட்டிக்கு டிக்கெட் புக் செய்ய விரும்புகிறீர்களோ அதன் உள்ளே செல்லவும். அதில், ஜெனரல், மிட் ரேஞ், பிரீமியம், விஐபி என பல ஆப்ஷன்கள் இருக்கும். உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கவும்.
பின்னர் UPI, NetBanking உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தி உங்களது டிக்கெட்களை பெற்றுக்கொள்ளவும். முன்பதிவின் விவரம் மெயில் மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ அனுப்பப்படும்.
ஐபிஎல் 2025 டிக்கெட் விலை
விளையாடும் அணிகள், இடம் ஆகியவற்றை பொறுத்தே டிக்கெட் விலை இருக்கும். லீக் போட்டிகளில் ரூ.900 முதல் ரூ.25000 வரை இருக்கும். குவாலிபையர் போட்டிகளுக்கு டிக்கெட் விலை அதிக தேவையின் காரணமாக சற்று அதிகமாக இருக்கலாம்.
மேலும் படிங்க: ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!