நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தையும் கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி கழக டி.ஜி.பி.யுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலாளர் கௌரவ் குப்தா தலைமையில், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அந்தஸ்து அதிகாரி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஏதேனும் ஈடுபட்டாரா என்பதைத் தீர்மானிக்க விசாரணை நடத்தப்படும் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தும்போது பாதுகாப்பு சோதனைகளைத் தவிர்த்து, […]
