ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்காததால் வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!

துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியுள்ளனர். கடைசியாக தோனியின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதன் பிறகு தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்ஷியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் தோல்விகளை சந்திக்காமல் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

கேப்டன் ரோகித் சர்மா அபாரம்

ரோகித் சர்மாவின் தலைமையில் கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. அதன் பிறகு தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றுள்ளனர். இதன் மூலம் ரோகித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த தொடர் முழுவதும் சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினர். குறிப்பாக ரோஹித் சர்மா ஃபைனலில் 76 ரன்கள் அடித்து அசத்தினார். லீக் போட்டிகளில் விராட் கோலி மிடில் ஓவர்களில் நன்றாக விளையாடினார். மறுபுறம் ஜடேஜா பவுலிங்கில் அசத்தினார்.  

தற்போது ஓய்வு இல்லை – ரோகித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. டி20 உலகக்கோப்பை முடிந்ததும் இந்த மூன்று பேரும் ஓய்வை அறிவித்திருந்தனர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்ற பிறகு யாரும் ஓய்வை அறிவிக்கவில்லை. போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரோகித் சர்மா தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளார். மறுபுறம் ஜடேஜா வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இன்ஸ்டாகிராமில் தெளிவுபடுத்தியுள்ளார்.

வருத்தத்தில் இளம் வீரர்கள்

ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதற்கு சீனியர் வீரர்கள் தான் காரணம் என்று பரவலாக பேச்சுக்கள் எழுதுவது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இவர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என்றும், இதனால் அந்த இடத்தில் பல இளம் வீரர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஓய்வை அறிவிக்காததால் சில இளம் வீரர்கள் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ், திலக் வருமா போன்ற வீரர்கள் தங்களின் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர். அதே போல ரெட் பால் கிரிக்கெட்டில் பலர் ரஞ்சிக்கோப்பையில் சாதனை செய்து தங்களின் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவிக்காதது பல இளம் வீரர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அடுத்ததாக இந்திய அணியின் வீரர்கள் ஐபிஎல் 2025 தொடரில் விளையாட உள்ளனர். அதன் பிறகு, இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.