2025 பிஓய்டி சீல் மற்றும் ஆட்டோ 3 விற்பனைக்கு அறிமுகமானது.!

பிஓய்டி நிறுவனத்தின் புதிய சீல் செடான் மற்றும் ஆட்டோ 3 எஸ்யூவி என இரண்டிற்கும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு, 2025 ஆட்டோ 3 மாடலுக்கு சிறப்பு சலுகையாக முதல் 3,000 வாடிக்கையாளர்களுக்கு அறிமுக விலை ரூ.24.99 லட்சம் முதல் ரூ.33.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ 3 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ.30,000 ஆக வசூலிக்கப்படுகின்ற நிலையில், 2025 சீல் எலக்ட்ரிக் செடானுக்கு ரூ.1.15 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், விலை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படலாம்.

2025 BYD ATTO 3

2025 ஆம் ஆண்டிற்கான ஆட்டோ 3 மாடல் ஆனது தற்பொழுது முக்கிய மாற்றங்களாக கருப்பு நிறத்தை பெற்ற இன்டீரியர் மற்றும் வெண்டிலேட்டட் இருக்கைகள் கொண்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் தற்பொழுது குறைந்த வோல்டேஜ் வெளிப்படுத்தும் பேட்டரியான மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. புதிய பேட்டரி வழக்கமான குறைந்த மின்னழுத்த பேட்டரிகளை விட ஆறு மடங்கு எடை குறைவாகவும் மற்றும் 15 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டது.

BYD Atto 3 Price (ex-showroom)
Dynamic Rs 24.99 lakh
Premium Rs 29.85 lakh
Superior Rs 33.99 lakh

201hp மற்றும் 310Nm டார்க் வெளிப்படுத்தும் மின்சார எஸ்யூவி ஆனது 0-100kph வேகத்தை எட்டுவதற்கு 7.3 வினாடிகள் எடுத்துக் கொள்ளுவதுடன் 60.48kWh பிளேட் பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டு ARAI சான்றிதழ்படி 521km வரம்பையும் மற்றும் ரிஜெனேரேட்டிவ் பிரேக்கிங்கையும் வழங்குகிறது.

குறைந்த விலை டைனமிக் வேரியண்டில் 49.92kWh பேட்டரி பொருத்தப்பட்டு, ARAI சான்றிதழ்படி 468km வழங்குகின்றது.

2025 BYD SEAL

2025 ஆம் ஆண்டிற்கான பிஓய்டி சீல் காரில் பவர்டு சன்ஷேட், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ பெறுவதுடன் மேம்படுத்தப்பட்ட ஏர் கண்டிஷனிங் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்ளது.

கூடுதலாக சஸ்பென்ஷனில் பிரீமியம் வேரியண்டில்  செலக்டிவ் டேம்பர்கள் (FSD-Frequency Selective Dampers) மற்றும் ரேஞ்ச்-டாப்பிங் பெர்ஃபாமன்ஸ் டிரிம் மூலம் சாலை நிலைமைகளின் அடிப்படையில் நிகழ்நேரத்தில் சரிசெய்யக்கூடிய புதிய டேம்பிங் சிஸ்டத்தையும் பெற்றதாக வரவுள்ளத்தை பிஓய்டி உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.