இந்தியாவில் 150சிசி சந்தையில் ஹைபிரிட் எஞ்சின் ஆப்ஷனை பெறுகின்ற முதல் மோட்டார்சைக்கிள் மாடலான யமஹாவின் FZ-S Fi ஹைபிரிட் விலை ரூ.1.46 லட்சத்தில் துவங்குகின்றது. சந்தையில் அமோகமான வரவேற்பினை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த பைக்கில் கூடுதலாக இடம்பெற்றுள்ள ஹைபிரிட் மூலம் சிறப்பான மைலேஜ் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த பைக்கில் உள்ள Smart Motor Generator உதவியுடன் செயல்படுகின்ற ஹைபிரிட் சிஸ்டத்தின் மூலம் கூடுதலான பவர் தேவைப்படும் இடங்களில் பேட்டரி மூலம் பவர் அசிஸ்ட் செய்வதுடன், சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்ய உதவுவதுடன், கூடுதலாக எஞ்சின் ஐடில் நேரங்கில் தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகி விடுவதுடன் கிளட்ச் லிவரை இயக்கினாலே உடனடியாக ஸ்டார்ட் ஆகின்ற நுட்பத்தை பெற்றதாக FZ-S Fi ஹைபிரிட் விளங்குகின்றது.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் சார்ந்த அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பைக்கில் 149cc ஒற்றை சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 12.4hp மற்றும் 13.3Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
மற்றபடி, அடிப்படையான டிசைனை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு எல்இடி இன்டிகேட்டர் ஆனது முன்புறத்தில் உள்ள ஃபாக்ஸ் பகுதியில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
4.2 அங்குல கலர் TFT டிஸ்ப்ளே பெற்று Y-connect ஆப் ஆதரவுடன் அழைப்பு/எஸ்எம்எஸ் தகவல், ம்யூசிக் கட்டுப்பாடு மற்றும் பல்வேறு செயல்பாடுகளை பெற்று சியன் கிரே, ரேசிங் ப்ளூ என இரு நிறங்களை பெற்று தமிழ்நாட்டில் 2025 யமஹா FZ-S Fi Hybrid (எக்ஸ்ஷோரூம்) விலை ரூ.1.45,539 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.