2025 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பொங்களூரு அணியும் மோதுகின்றன. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே ஏராளமான அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லின் முதல் இரண்டு பாதியில் விளையாட மாட்டார் என செய்திகள் வெளியானது. அதேபோல் டெல்லி அணியின் வீரர் ஹாரி புரூக் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் அவரே கூறி இருந்தார். இந்த நிலையில், ஐபிஎல் ரசிகர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி அணியின் கேப்டன் கே.எல்.ராகுலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிங்க: ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்காததால் வருத்தத்தில் இருக்கும் 2 வீரர்கள்!
கே.எல்.ராகுல் விலகலா?
கடந்த டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் கே.எல்.ராகுல் ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்த நிலையில், அவர் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கே.எல்.ராகுலின் மனைவிக்கு இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசவ நேரத்தில் கே.எல்.ராகுல் அவரது மனைவி அருகில் இருந்து கவனிக்க விரும்புவதால், அவர் ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை தவற விடுவார் என கூறப்படுகிறது.
மயங்க் யாதல் காயம்
இதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முதுகில் எற்பட்ட காயத்தால் அவதிபட்டு வருவதாகவும் தற்போது அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அகாடமியில் காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாவும் கூறப்படுகிறது.
அவர் காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியை எப்போது பெறுவார் என்று தெரியவில்லை. இதன் காரணமாக அவர் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவற விடுவார் என கூறப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் மயங்க் யாதவ் ரு.11 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். மேலும், அந்த அணியில் கேப்டனாக பயணித்த கே.எல்.ராகுல் டெல்லி அணிக்கு சென்றதால், டெல்லி அணியில் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டு லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: Virat Kohli Trophy Collections: 2008 U19 உலக கோப்பை முதல் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரை