Jiiva Missed Movies: `மெட்ராஸ் முதல் Thug Life வரை' – ஜீவா நடிக்காமல் மிஸ் செய்த படங்கள் இவைதான்

ஜீவா நடிப்பில், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் சமீபத்தில் `அகத்தியா’ திரைப்படம் வெளியாகியிருந்தது. `அகத்தியா’ திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடிகர் ஜீவா விகடனுடனான பிரஸ் மீட்டிற்கு இணைந்திருந்தார்.

அகத்தியா

அந்த பிரஸ் மீட்டில் நிருபர்களின் கேள்விகள் அத்தனைக்கு வெளிப்படையாவே ஜீவா பதிலளித்திருந்தார். நடிகர்கள் பலரும் தங்களுடைய கரியரின் முக்கிய நேரங்களில் பல முக்கியமான படங்களில் நடிக்கவேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டிருப்பார்கள். அப்படி அதில் அவர் மிஸ் செய்த படங்கள் குறித்தான விவரங்களையும் பகிர்ந்திருந்தார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்திருந்த `அயன்’ படத்தில் முதலில் ஜீவாதான் நடிக்க வேண்டியதாம். `கற்றது தமிழ்’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் கே.வி. ஆனந்த் ஜீவாவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இப்படம் நடக்காமல் போனது. இத்திரைப்படத்திற்குப் பிறகு கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் `கோ’ படத்தில் ஜீவா நடித்தார். அருள்நிதி நடிப்பில் சாந்த குமார் டைரக்ஷனில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான `மெளனகுரு’ படத்திலும் ஜீவாதான் முதலில் நடிக்க வேண்டியதாம். அதுபோல, பா. ரஞ்சித்தின் இரண்டாவது திரைப்படமான `மெட்ராஸ்’ படத்திலும் ஜீவா நடிப்பதாக இருந்திருக்கிறது.

ஜீவா

அட்லீ இயக்குநராக அறிமுகமான `ராஜா ராணி’ படத்தின் கதையும் முதலில் ஜீவாவிடம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அக்கதையில் ஆர்யா நடித்தார். இதன் பிறகு அட்லீ தயாரிப்பாளராக அறிமுகமான `சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் ஜீவா நடித்தார். அதுபோல, மணி ரத்னமிடமிருந்தும் ஜீவாவுக்கு அழைப்பு வந்திருகிறதாம். ஜூன் மாதம் வெளியாகவிருக்கிற `தக் லைஃப்’ படத்தில் நடிப்பதற்கு ஜீவாவை அழைத்திருக்கிறார் மணிரத்னம். அவை அந்த சமயத்தில் சரியாக அமையவில்லை என்பதையும் ஜீவா பகிர்ந்திருக்கிறார்.

இவையெல்லாம்தான் ஜீவா மிஸ் செய்த படங்கள்! இதில் உங்களுடைய பேவரைட் எது ?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.