Manimegalai: `பணம் கட்டலைனு காரை எடுத்துட்டுப் போயிட்டாங்க; அப்போ…' – மணிமேகலை எக்ஸ்க்ளூசிவ்

`டான்ஸ் ஜோடி டான்ஸ் – ரீலோடட் சீசன் 3′ நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ஆங்கரிங் பக்கம் வந்திருக்கிறார் தொகுப்பாளினி மணிமேகலை. பல நிகழ்ச்சிகளின் மூலம் நம்மை மகிழ்வித்தவர் சமீபத்தில் புதியதாக வீடு ஒன்றையும் வாங்கியிருந்தார். இப்படியான அனைத்து நேர்மறையான விஷயங்கள் அனைத்திற்கும் வாழ்த்துக்களைச் சொல்லி மணிமேகலையுடன் ஒரு மாலை நேரத்தில் குட்டி சிட் சாட் போட்டோம்.

மணிமேகலை

எனக்கும் டான்ஸுக்கும் எந்த பொருத்தமும் இல்ல

மணிமேகலை பேசுகையில், “ `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சி நல்ல தொடக்கமாக அமைஞ்சிருக்கு. மக்கள் எப்போதும் அவங்களோட சப்போர்ட் கொடுத்திருக்காங்க. இப்போதும் கொடுக்கிறாங்க. டான்ஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வந்திருக்கேன். ஆனா, எனக்கும் டான்ஸுக்கும் எந்த பொருத்தமும் இல்ல. ஒரு டான்சரை கல்யாணம் பண்ணியிருக்கேன். அதுமட்டும்தான் பொருத்தம்.

ஸ்கூல் நாட்கள்லகூட நான் டான்ஸ் பண்ணினது கிடையாது. எனக்கு டான்ஸ் சரியாக வராததுனாலதான் நல்ல டான்ஸ் வர்ற ஒருத்தரை பார்த்து கல்யாணம் பண்ணியிருக்கேன்( சிரிக்கிறார்). மக்கள் எப்போதும் அவங்க அன்பைக் கொடுத்திருக்காங்க. நேர்மறையான விஷயங்களைச் சொல்லியிருக்காங்க. இப்போ `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சிக்கும் கொடுத்திருக்காங்க. ஒரு ரெண்டு பேர் எதவாது சொன்னால்கூட ஒரு பத்து நபர்கள் `நீங்க நல்லா பண்ணுங்க. சூப்பர்’னு சொல்வாங்க.

வீடு..!

இந்த விஷயங்களெல்லாம்தான் எனக்கு பூஸ்ட்!” என்றவர் சமீபத்திய புதிய வீடு ஒன்று வாங்கி குடியேறியிருந்தார். அது குறித்து அவர், “ வீடு வாங்கினது எங்களுக்கு ரொம்பவே ஒரு எமோஷனலான மொமன்ட். எங்களைப் பற்றி எல்லோருக்குமே எல்லா விஷயங்களும் தெரியும். சென்னைல பெரிய உறுதுணை எதுவும் இல்லாத நேரத்துலஒன்னு நினைப்போம்ல…அப்படி நினைச்ச விஷயம்தான் இப்போ நிறைவேறியிருக்கு.

எங்களுடைய உழைப்புல வாங்கணும்னு நினைச்சோம். அந்த விஷயம் நடந்தது எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. நல்ல விஷயங்கள் அந்த வீட்டுல நடக்கும் நம்புறோம். காருக்கு ஈ.எம்.ஐ கட்டலைனா வண்டியை எடுத்துட்டு போயிடுவாங்கனு படத்துல பார்த்திருக்கோம்.

மணிமேகலை & ஹூசைன்

எனக்கு ஹூசைதான் ஆறுதல்

ஆனால், அப்படியொரு விஷயம் எங்களுக்கு நடந்தது. முதல்ல நாங்க ஐ20 கார் வச்சிருந்தோம். மூணு மாசம் ஈ.எம்.ஐ கட்டலைனு நான்காவது மாசம் வண்டியை எடுத்துட்டுப் போயிட்டாங்க. அந்த நேரத்துல நானும் என் கணவர் ஹூசைனும் பரஸ்பரம் ஆறுதல் சொல்லிகிட்டோம். அப்போ நாங்க அடுத்த நான்கு வருஷத்துல ஒரு பி.எம்.டபுள்.யூ கார் வாங்கணும்னு முடிவு பண்ணினோம். ஆனால், நாங்க நினைச்ச இந்த விஷயம் அடுத்த இரண்டரை வருஷத்துல நிறைவேறியது. அதுபோல , வீடு வாடகை கொடுக்கவும் சில சவால்களை சந்திச்சிருக்கோம். இப்படியான நேரங்கள்ல எனக்கு ஹூசைதான் ஆறுதல். அவர் மட்டும்தான் எனக்கு! எனக்குள்ள இருக்கிற தன்னம்பிக்கை, தைரியத்துக்கு காரணமும் அவர்தான்.” என்றவர், “ இத்தனை ஆண்டுகள் மீடியா துறையில இருந்தால் நிச்சயமாக சினிமா வாய்ப்புகள் வரும். எங்களுக்கு வந்தது.

ஆனால், எனக்கு அந்தப் பக்கம் பெருசா ஐடியா இல்ல. என்னுடைய கணவர் அந்தப் பக்கம் கவனம் செலுத்திட்டு இருக்காரு. இப்போதும் தொடர்ந்து குறும்படங்கள் பண்ணீட்டு இருக்காரு.” எனக் கூறினார்.

மணிமேகலை

மேலும் பேசிய அவர், “ முதன்முதலாக நானாகதான் சன் மியூசிக்ல ஆடிஷன் அட்டென்ட் பண்ணி வேலைக்கு போனேன். அதன் பிறகு மற்ற ரெண்டு சேனல்ல கிடைச்ச வாய்ப்பு தானாக வந்ததுதான். சன் மியூசிக்ல இருந்த நேரத்துல எல்லோரும் என்னை `சன் மியூசிக்’ மணிமேகலைனு அடையாளப்படுத்தினாங்க. கமல் சார் உட்பட பல பெரிய பிரபலங்களோட நேர்காணல்களை நான் அங்கப் பண்ணியிருக்கேன். அதே மாதிரி `மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை’, `குக் வித் கோமாளி’, இப்போ `டான்ஸ் ஜோடி டான்ஸ்’ எல்லா நிகழ்ச்சியிலையும் அந்த நிகழ்ச்சியின் பெயரை வச்சு அடையாளப்படுத்தியிருக்காங்க.” எனக் கூறி முடித்துக் கொண்டார்.

முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.