டெல்லி அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30000 விமானிகள் தேவை உள்ளதாக மத்திய அமைசர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும் ஆஸ்திரியாவின் டைமன்ட் விமான நிறுவனங்களின் கூட்டு அமைப்பான சக்தி விமான நிறுவனம் சார்பில் 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு , ”இந்தியாவில் தற்போது 800-க்கும் அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயங்கி வரும் […]
