அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ‘இந்த மாத இறுதியில் வான்ஸ் தனது மனைவியும் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியுமான உஷாவுடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார்’ என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான பிறகு வான்ஸின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். அவர் கடந்த மாதம் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியான […]
