இது நடந்தால்.. பும்ராவின் கிரிக்கெட் கரியர் முடிந்துவிடும் – நியூசி வீரர் ஷேன் பாண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது இவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. 

தற்போது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதிலும் முதல் இரண்டு வாரத்திற்கு பும்ராவால் பங்கேற்க முடியாது என்ற செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகின்றன. மேலும், ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது. இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் பேசியுள்ளார். 

மீண்டும் காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான் 

இது தொடர்பாக பேசிய ஷேன் பாண்ட், பும்ரா சிட்னி டெஸ்டில் ஸ்கேனுக்கு சென்றபோது, நான் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டு இருக்கும் என நினைத்தேன். ஏனென்றால் முதுகு பகுதியில் அவருக்கு எழும்பில் காயம் ஏற்பட்டிருக்கும். இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என கணித்தேன். இந்த நிலையில், தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதாக கூறப்படுகிறது. பும்ரா மீண்டும் குணமாகி நல்ல நிலைமைக்கு திரும்பி விடுவார்.

மேலும் படிங்க: IPL 2025: கேப்டன் பதவியை நிராகரித்த கே.எல்.ராகுல்.. குழப்பத்தில் டெல்லி அணி

ஆனால் என்னுடைய அனுபவத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பும்ராவுக்கு மீண்டும் முதுகில் காயம் ஏற்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் அத்துடன் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும். ஏனென்றால் ஒரே இடத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. அதில் இருந்து மீண்டு வருவது மிக கடினம். எனவே பும்ராவை பிசிசிஐ சரியாக கையாள வேண்டும். அவரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாட வைக்க வேண்டாம். அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 

விளைவு பின்னர்தான் தெரியும்

2027ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை வரை அவர் விளையாட் வேண்டும் என்றால் பும்ரா டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்கேற்க கூடாது. 5 போட்டிகளில் கொண்ட டெஸ்ட் போட்டி என்றால் அதில் அவர் மூன்றில் விளையாட வேண்டும். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ஒருவாரத்தில் மூன்று போட்டிகள் நடைபெறும். இதில் அவர் 30 ஓவர் வீசுவார். அதேபோல் பயிற்சியின் போது சில ஓவர்கள் வீசுவார். இது ஒரு டெஸ்ட் போட்டிக்கு சமமாகும். 

பிரச்சனை எங்கு ஏற்படும் என்றால் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பும்போது, அவரால் தொடர்ந்து ஓவர் வீச முடியாது. அப்படி செய்யும்பட்சத்தில் அவருக்கு மீண்டும் முதுகில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீரர்கள் தான் அனைத்து போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கீறார்கள். ஆனால் அதன் விளைவு பின்னர்தான் தெரியும். இது எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன் என தெரிவித்தார்.  

மேலும் படிங்க: ஐபிஎல் 2025.. ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?.. ரசிகர்களே நோட் பண்ணிக்கோங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.