டாடா ஹாரியர் இவி அறிமுகத்திற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை..!

டாடா மோட்டார்சின் அடுத்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக விற்பனைக்கு வரவுள்ள ஹாரியர் இவி QWD எனப்படுகின்ற ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகியிருந்தது.

விற்பனையில் கிடைத்து வருகின்ற ஹாரியர் ICE மாடலில் இருந்து பெறப்பட்டுள்ள டிசைனை தக்கவைத்துக்கு கொண்டுள்ள EV மாடலில் இடம்பெற உள்ள பேட்டரி தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை, ஆனால் “Acti.ev” பிளாட்ஃபாரத்தில் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை பெற்று 450-600 கிமீ வரையிலான ரேஞ்ச் பிரிவில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக டாடா மோட்டார்ஸ் தனது இவி வாகனங்களில் பயன்படுத்தி வருகின்ற வழக்கமான டிசைன் அமைப்பினை ஹாரியருக்கும் வழங்கியுள்ள எல்இடி ஹெட்லைட் உடன் இணைக்கப்பட்ட எல்இடி லைட் பார், மிக நேர்த்தியான அலாய் வீல் டிசைனை கொண்டிருக்கின்றது.

இன்டீரியர் அமைப்பில் தற்பொழுதுள்ள ஹாரியர் காரிலிருந்து பெறப்பட்டுள்ள டேஸ்போர்டின் மத்தியில் 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்குவதுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உடன் கூடுதலாக சன்ரூஃப், ஆம்பியன் லைட்டிங் என பலவற்றை கொண்டிருக்கும்.

அடுத்து, மிக முக்கியமாக பாதுகாப்பு சார்ந்த வசதிகளில் 3 புள்ளி சீட் பெல்ட், 7 ஏர்பேக்குகள் உட்பட லெவல் 2 ADAS , 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் என பலவற்றை கொண்டிருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற மஹிந்திரா XEV 9e, BYD atto 3 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ள உள்ள டாடாவின் ஹாரியர் இவி விலை ரூ.24 லட்சத்தில் துவங்கலாம்.

tata harrier ev front view

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.