ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மிகவும் ஸ்போர்டிவான மட்டுமல்லாமல் வேகமான ஸ்கூட்டர் மாடலாக வந்துள்ள ஜூம் 125 மாடலில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களில் கவனிக்கவேண்டிய அம்சங்களை பற்றி தற்பொழுது அறிந்து கொள்ளலாம்.
எஞ்சின் மற்றும் மைலேஜ்
சந்தைக்கு வந்துள்ள ஹீரோவின் புதிய ஜூம் 125 மாடலில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 9.79 bhp பவர் மற்றும் 10.4 NM டார்க் வழங்குகின்ற நிலையில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகின்றது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 103 கிமீ வரை எட்டுகின்ற ஸ்கூட்டரில் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 45கிமீ முதல் 47கிமீ வரை கிடைக்கின்ற நிலையில், விரைவான திராட்டிள் ரெஸ்பான்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது.
முக்கிய வசதிகள்
18 லிட்டர் கொள்ளளவு பெற்ற பூட்ஸ்பேசில் முழுமையான பெரிய ஹெல்மெட் வைக்கும் வகையில் அமைந்திருப்பதுடன் முழுமையான எல்இடி விளக்குகள், சிக்யூன்சில் முறையிலான டர்ன் இன்டிகேட்டர், முன்புறத்தில் 190மிமீ டிஸ்க் அல்லது டிரம் பிரேக் உடன் பொதுவாக பின்புறத்தில் டிரம் பிரேக்கினை பெற்று 14 அங்குல அலாய் வீல் கொண்டிருக்கின்ற ஜூம் 125 மாடலில் சிவப்பு, கிரே, ப்ளூ, மற்றும் மஞ்சள் என நான்கு விதமான நிறங்களில் உள்ளது.
எல்சிடி கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த மாடல் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெறும் வகையில் ப்ளூடூத் இணைப்பினை கொண்டதாக வந்துள்ளது.
ஜூம் 125 வேரியண்ட்
VX மற்றும் ZX என இரண்டு வேரியண்டுகளை பெற்றுள்ள ஜூம் 125யில் டாப் மாடலாக அமைந்துள்ள ZX வகையில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்குடன் மெசின் ஃபினிஷ்டு அலாய் வீல், எல்இடி விங்கர்ஸ், முன்புறத்தில் ஸ்டோரேஜ், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஒளிரும் வகையிலான ஸ்டார்ட்டிங் பொத்தான், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் பூட் லைட் ஆகியவற்றுடன் சிவப்பு, கிரே, ப்ளூ, மற்றும் மஞ்சள் என நான்கு வண்ணங்களும் உள்ளன.
பேஸ் VX வேரியண்டில் கேஸ்ட் அலாய் வீலுடன் முன்புறத்தில் டிரம் பிரேக் பெற்று கிரே மற்றும் ப்ளூ என இரு நிறங்களை மட்டும் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
ஜூம் 125 பைக்கிற்கு நேரடியான போட்டியை டிவிஎஸ் என்டார்க் 125, ஏப்ரிலியா SR125 ஏற்படுத்துவதுடன் கூடுதலாக சுசூகி அவெனிஸ், யமஹா ரே இசட்ஆர், ஹோண்டா டியோ 125 ஆகியவை கிடைக்கின்றது.
ஜூம் 125 விலை பட்டியல்
தமிழ்நாட்டில் ஹீரோ ஜூம் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90,900 முதல் டாப் ZX வேரியண்ட் ரூ.99,300 வரை அமைந்துள்ளது.