Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' – ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகாரளித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக அவர் புகார் கொடுத்திருக்கிறார்.

நடிகை சௌந்தர்யா

ஆந்திரா மாநிலம், கமம் என்கிற மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிமல்லு, “நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. செளந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்திலுள்ள நிலத்தை மோகன் பாபு பெற நினைத்திருக்கிறார். அந்த நிலத்தை செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்வதற்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமாக அந்த நிலத்தை மோகன் பாபு ஆக்கிரமித்திருக்கிறார்” எனவும் புகார் கூறியிருக்கிறார்.

மோகன் பாபு

கமம் கிராமத்தின் உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட அலுவலர் என இருவரிடமும் புகாரளித்து அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆசிரமங்களுக்கும், ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதே புகாரில் மோகன் பாபுவுக்கு அவரின் இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையேயான மோதலையும், மஞ்சு மனோஜுக்கு நிதி கோரியும் இந்த மனுவில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.