ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை..!

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான டிகுவான் ஆர்-லைன் இந்திய சந்தையில் மிகவும் பிரீமியம் வசதிகளை பெற்ற மாடலாக முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளதால் விலை ரூ.45 லட்சத்துக்கும் கூடுதலாக அமையலாம்.

MQB Evo பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிகுவான் ஆர்-லைனில் வரவுள்ள இந்திய சந்தைக்கான மாடலின் பவர்டிரையின் விபரங்கள் வெளியாகவில்லை என்றாலும், சர்வதேச அளவில் கிடைக்கின்ற அதிகபட்ச 265Hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 4Motion ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 6 வேக மேனுவல் அல்லது 7 வேக DCT என கிடைக்கின்ற மாடல் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4,539 மிமீ நீளமுள்ள டிகுவான் R-Line எஸ்யூவி காரின் முன்புறத்தில் வழக்கமான மாடலை விட மாறுபட்ட கிரில் அமைப்பு, மிக நேர்த்தியான 19 அங்குல அலாய் வீல் பெற்று இன்டீரியரில் ஸ்போர்ட்டிவ் இருக்கைகளுடன் 10.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் டேஸ்போர்டின் மத்தியில் மிதிக்கும் வகையிலான 15.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் VW’s MIB4 மென்பொருள் கொண்டிருக்கும்.

இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலும் ஃபோக்ஸ்வேகனின் ஆடாப்டிவ் சஸ்பென்ஷன் முறையை சார்ந்த Dynamic Chassis Control Pro பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாடலை தவிர கோல்ஃப் GTI காரையும் அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.