சென்னை: தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று எல்லார்க்கும் எல்லாம் என்ற பெயரில், பட்ஜெட்டுக்கான ‘லோகோ’ வெளியிடப்பட்டு உள்ளது. இந்த லோகோவை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அத்துடன் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் நாளை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார். அதில், சமூகத்தின் அனைத்துத் […]
