திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கடலோர மாவட்டத்தில் உள்ள தகழி அருகே தாயும் மகளும் ஸ்கூட்டரில் பிற்பகல் 2.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்துக்கு அருகில் ஸ்கூட்டரில் வந்ததாகவும் ரெயில் மோதி இருவரும் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் விசாரணை நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படாததால் இது தற்கொலை என உறுதிபடுத்த முடியாது என அதிகாரி ஒருவர் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :