ஐதராபாத்: மத்திய அரசின் தொகுதி மறுவரையை ஏற்க முடியாது என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக, இதுதொடர்பாக திமுக எம்.பிக்க்கள் மற்றும் அமைச்சர்கள் குழு முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவால் மக்கள் தொகை […]
